ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று!

img 3347
img 3347

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கும் ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜே.வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பொரளை பகுதியில் அமைந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் காரியாலயத்தில் ஆளும் கட்சியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச, பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்தன தேரர், எம்.எல்.ஏ.எம்.அத்தாவுல்ல, கெவிது குமாரசிங்க, டிரான் அலஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.