வவுனியா விபத்தில் ஒருவர் காயம்!

IMG 9119
IMG 9119

வவுனியா ஹொறவப்பொத்தான வீதியில் இன்று(20) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நகரிலிருந்து ஹொறவப்பொத்தானை வீதிநோக்கி வருகைதந்த வட்டா வாகனம் பூந்தோட்டம் பகுதியில் இருந்து நகருக்கு சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.