யாழ்கலாச்சார மத்திய நிலையத்தினை முன்னாள் முதல்வர் ஆனோல்ட் மத்திய அரசிடம் கையளிக்க உடன்பட்டிருந்தார்!

IMG 20201231 WA0036
IMG 20201231 WA0036

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாச்சார மத்திய நிலையத்தினை முன்னாள் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மத்திய அரசிடம் அதனை நிர்வகிக்க கையளிப்பதற்கு இணங்கியதன் காரணமாகவே குறித்த கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்தும் அதனை திறப்பதில் காலதாமதம் காணப்படுவதாக யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி. மணிவண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்

யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தினை கையேற்ப தற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்
 அதிலும் குறிப்பாக கலாச்சார நிலையத்தினை இயக்குவதற்கான உத்தியோகத்தர்களை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம் 

நான் மாநகர முதல்வராக பதவியேற்ற காலத்திலிருந்து முதல் பணியாக இந்த விடயத்தினை முன்னிறுத்தி செயற்படுத்திவருகின்றேன் எனினும் குறித்த கட்டிடமானது யாழ்ப்பாண மாநகரசபை யிடமிருந்து பறிக்கப்படும் நிலை காணப்படுகின்ற நிலையில் அதனை யாழ் மாநகரசபை பொறுப்பேற்று நடாத்துவதற்குரிய செயற்பாட்டை நான் முன்னெடுத்துள்ளேன்

அத்தோடு அங்கே பணியாற்றுவதற்காக 67 உத்தியோகத்தர்களுக்கான  நியமனங்களை வழங்குவதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுத்துள்ளேன்

அத்தோடு அந்த கட்டிடத்தினை நிர்மாணித்த பொறியியலாளர்களிடம் இந்த கட்டிடத்தினை எவ்வாறு கையாள்வது பராமரிப்பது தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றோம் 
வெகுவிரைவில் உத்தியோகபூர்வமாக குறித்த கட்டடமானது திறப்புவிழா செய்யப்பட்டு  யாழ் மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளது

அத்தோடு இந்திய துணைத் தூதுவரிடம் குறித்த விடயம்தொடர்பில் பல விடயங்களை தெரியப்படுத்தி உள்ளோம் அவர்களும் குறித்த விடயம் தொடர்பில் எமக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றார்கள்
எனினும் குறித்த கட்டிடமானது வெகுவிரைவில் மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளது

மேலும்  விடயம் ஒன்றை குறிப்பிட விரும்புகின்றேன் முன்னைய ஆட்சியாளர் குறித்த கலாச்சார மத்திய நிலையத்தினை மத்திய அரசாங்கத்திற்கு கையளிப்பதற்கு இணங்கி இருந்ததன் காரணமாகவே இவ்வளவு காலமும் குறித்த கட்டிடம் திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன 

எனினும் இந்த கலாச்சார மத்திய நிலையமானது யாழ்ப்பாண மாநகர சபையின் சொத்து அது இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு நமது மாநில சபைக்கு மீண்டும் கையளிக்கப்பட உள்ளது என்பதனை நான் மிகவும் சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.