இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்த விவாதம் இன்று

download 18 1
download 18 1


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட், இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள அறிக்கை குறித்து இன்று (24) விவாதிக்கப்படவுள்ளது.

இதன்போது பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கனடா, ஜெர்மனி, மொன்டினிக்ரோ, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குகின்றன.

மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்ட போதிலும் இலங்கைக்கு எதிரான குழுக்கள் வேறு நாடுகளுக்கு தேவையான பிரேரணையொன்றை சமர்ப்பிக்கின்றமை வருத்தத்திற்குரியது என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று (23) உரையாற்றும் போது வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கருத்து தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை பிரேரணைக்கு எதிராக அணிதிரளுமாறு வௌிவிவகார அமைச்சர் சர்வதேச நாடுகளிடம் இதன்போது அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.