முச்சக்கர வண்டி மீது பேருந்து மோதி விபத்து;இருவர் காயம்

1026021 accident
1026021 accident

மட்டக்களப்பு நகரில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளிக்கு சென்ற மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி மீது தனியார் போக்குவரத்து பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியை ஓட்டிச்சென்ற தந்தையும் அதில் பயணம் செய்த முன்பள்ளி மாணவியும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பேருந்தும் காவல்துறையினரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.