கெட்டபொல மாணவர்களின் பயன்பாட்டிற்கான மேம்பாலம் படையினரால் நிர்மாணிப்பு

20210223 esrbridge 03
20210223 esrbridge 03

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திரசில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இலங்கை பொறியாளர்கள் படையினரால் மாத்தறை கெட்டபொல பெரலபனதர மகா வித்தியாலய வளாகத்தை இணைக்க பாதையின் குறுக்கே புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் திறப்பு விழா அண்மையில் நடைப்பெற்றது.

ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனையின் பேரில் தலைமை கள பொறியாளர் இந்த மேம்பாலத்தை அமைப்பதை இலங்கை பொறியாளர் படையிடம் ஒப்படைத்தார். பாலத்தின் நீளம் 19 மீற்றரும் மற்றும் அகலம் 1.5 மீற்றருமான இத் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 21.74 மில்லியன் ரூபாவாக இருந்தப்போதிலும் பொறியியலாளர் படையினர் 16.29 மில்லியன் ரூபாவில் நிறைவு செய்துள்ளனர். இதனால் அரச நிதி ரூபா ஐந்து மில்லியன் சேமிக்கப்பட்டுள்ளது.

மேம்பால திறப்பு விழாவின் பிரதம அதிதிகளாக மாத்தறை மாவட்ட அபிவிருத்தி குழு
தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ நிபுன ரணவக இலங்கை இராணுவத்தின் தலைமை கள பொறியியலாளரும் பொறியாளர்கள் படையின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர, நிதி அமைச்சின் உதவி செயலாளர் திரு.புத்திக தியகம மாத்தறை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் , அரச அதிகாரிகள், பஸ்கொட வலயக் கல்விப் பணிப்பாளர் பெரலபனதர மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பாடசாலையின் அமைவிடம் காரணமாக இக் கட்டுமானம் பாடசாலையின் நீண்டகால தேவையாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.