திவுலப்பிட்டிய – பேலியகொட தொற்றாளர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியது

202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF
202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF

நாட்டில் மேலும் 497 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 314 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 4 ஆயி ரத்து 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் 664 கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 625 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 464 ஆக அதிகரித்துள்ளது.