தொடருந்து பயணச்சீட்டு தொடர்பான வேலைத்திட்டத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு!

o
o

தொடருந்து பயணச்சீட்டை மின்னணு முறையில் விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த திட்டத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கினால் பாரிய நிதி இழப்பு ஏற்படும் என அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் இந்திக்க தொடம்கொட குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்து பயணச்சீட்டை மின்னணு முறையில் விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை தேசிய நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.