ஏற்றம் அறக்கட்டளையினரால் மாணவிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!

b493ffc9 408f 425b a966 4407dce9f1dc
b493ffc9 408f 425b a966 4407dce9f1dc

ஏற்றம் அறக்கட்டளையின் எங்களால் எங்களுக்கு எனும் ​செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி – மலையாளபுரம் கிராமத்தில் நான்கு மாணவிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

462cbee4 c089 4db6 8c70 b2436322a9bc 1

இன்று (28.02.2021) 4 மணிக்கு மலையாளபுரம் கிராம அபிவிருத்தி சங்க கட்டட தொகுதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஏற்றம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ரெஜி தலைமையில் நடைபெற்ற துவிச்சக்கரவண்டி கையளிப்பு நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தாஸ், கிராம மக்கள் சக்தி அமைப்பின் தவிசாளர் தீபன், கிராம மக்கள் சக்தி உறுப்பினர் ​கோசலா, ஏற்றம் அறக்கட்டளையின் இயக்குனர் தனபாலசிங்கம் சுதாகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

33aa88e7 456c 4054 90b0 66c5eb97afe5 1

ஏற்றம் அறக்கட்டளையின் அங்கத்தவர்களான பேரின்பராசா முகுந்தன் மற்றும் பேரின்பராசா மயூரன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் ரன்ஜித்குமார் கோகிலா,செல்வகுமார் கிதுர்சிகா,கிகான் பவானி,நடேசன் நதீசா ஆகிய மாணவிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.

8924a40a a827 45c7 9715 60eeb6a83f27 1

இந்நிகழ்வில் மக்கள் சக்தி அமைப்பின் தவிசாளர் தீபன் மற்றும் ஏற்றம் அறக்கட்டளையின் இயக்குனர் தனபாலசிங்கம் சுதாகரன் அவர்களும் கருத்துரைகள் வழங்கினர்.

ஏற்றம் அறக்கட்டளையின் இயக்குனர் தனபாலசிங்கம் சுதாகரன் அவர்கள் கருத்துரை வழங்குகையில், ஏற்றம் அறக்கட்டளையினை தாம் 3 வருடங்களாக நடாத்திவருவதாகவும் ஏற்றம் அறக்கட்டளையின் ஊடாக தாம் பல்வேறுபட்ட சேவைகளை செய்துவருவதாகவும் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி பெண்பிள்ளைகளின் கல்வி இச்சமூகத்துக்கு மிகவும் அவசியம் என்றும் பெண்கள் தன் குடும்பத்தையும் எதிர்கால சந்ததியினரையும் சிதரவிடாமல் இலக்கை அடைபவர்கள் ஆகவே பெண்பிள்ளைகளின் கல்வி இச்சமூகத்துக்கு மிகவும் அவசியம் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.