பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இடையூறு விளைவித்தால் நடவடிக்கை

download 3
download 3

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் இடையூறின்றி நடைபெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக பிரதிப்காவல்த்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

குறித்த காலப்பகுதியில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார துறையினருடன் இணைந்து செயற்படுவதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து காவல்த்துறை நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் காவல்த்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரபரீட்சார்த்திகள் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

குறித்த மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிற்பகல் வேளையில் அயலவர்கள் தொலைக்காட்சி, வானொலி போன்ற இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்துவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பிரதிப் பிரதிப்காவல்த்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்

எனவே இவ்வாறான இலத்திரனியல் உபகரணங்களை பயன்படுத்தும் போது இதன் ஓசைகளை தங்கள் சுற்றுப்புறச் சூழல் பகுதியில் மாத்திரம் அதனை மட்டுப்படுத்துமாறும் காவல்த்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்த்துறைமா அதிபர் அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.