சாதாரண தர பரீட்சை எழுதுவதற்காக தோற்றிய மாணவர்களின் வருகை திருப்தி-பரீட்சைகள் திணைக்களம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 03 01T185109.325
625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 03 01T185109.325

நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை எழுதுவதற்காக தோற்றிய மாணவர்களின் வருகை திருப்திகரமாக அமைந்திருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று குறிப்பிட்ட படி ஆரம்பமான இந்த பரீட்சை 4513 மத்திய நிலையங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இன்றைய காலநிலைக்கு மத்தியில் மாணவர்கள் குறிப்பிட்ட வகையில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 25 ஆயிரத்து 98 மாணவர்கள் தோற்றுகின்றனர். இங்கு 179 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பரீட்சை எதிர்கொள்வதற்கு நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர். ஆன்மீக நிலையங்கள் மற்றும் வீடுகளில் இறை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பெற்றோரும், பொறுப்பாளர்களும் பிள்ளைகளை பரீட்சை நிலையங்களை நோக்கி வாழ்த்தி, வழியனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.