பொத்துவில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தடை உத்தரவு

IMG 20210303 WA0007
IMG 20210303 WA0007

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் காவல்த்துறையினர் நீதிமன்ற தடை உத்தரவுகளை பெற்று வருகின்றனர்.

இன்று காலை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் தொடங்கி அகிம்சை வழியிலா சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்திய பொத்துவில் காவல்த்துறையினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்டப்பட இருந்த பதாகைகளை கைப்பற்றியதுடன் பதாகைகளையும், போராட்ட காரர்களை ஏற்றிச் சென்றதாக கூறி பொத்துவில் காவல்த்துறையினர் வாகனம் ஒன்றைக் கைப்பற்றி காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இதேவேளை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு இன்று காலை பொத்துவில் காவல்த்துறையினர் நீதிமன்ற தடை உத்தரவை வழங்கி உள்ளனர்.

இதேநேரம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் மட்டக்களப்பில் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினை தடுக்கும் வகையில் தடையுத்தரவுகளும் , பதாகை வைத்திருந்ததாக வேனின் சாரதி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவ்விடத்திற்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் ஆகியோர் காவல் நிலையத்திற்கு சென்று சாரதியை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க விசாரணைக்கு விடுவிப்பதாக குறிப்பிட்டனர்.