நெல் கொள்வனவின்போது ஆறு மாவட்டங்களுக்கே முன்னுரிமை-மஹிந்தானந்த அளுத்கமகே

77094605 f0dd1ec3 mahindananda aluthgamage 850x460 acf cropped
77094605 f0dd1ec3 mahindananda aluthgamage 850x460 acf cropped

போட்டி விலையில் நெல் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மாதமொன்றுக்கு 2 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஏப்பிரல் மாதம் 7 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலப்பகுதிக்குள் குறித்த தொகை நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், குறித்த தொகை நெல்லினை கொள்வனவு செய்வது தொடர்பில் 6 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, அனுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, பொலனறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகலை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த பிரதேசங்களில் இருந்து 60 லொறிகள் ஊடாக நாளொன்றுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி மாபியாவை இல்லாதொழித்து, மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகுமென அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.