உள்ளூர் உற்பத்தியில் தன்னிறைவு மூலம் நாட்டை கட்டியெழுப்பலாம்-காதர் மஸ்தான்

IMG 20210305 WA0033
IMG 20210305 WA0033

ஜனாதிபதி கோதாபாய ராஜபக்ச அவர்களின் சிந்தனையில் உருவாகி கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கமைய சமூர்த்தி வதிவிட பொருளாதார நுண்நிதிய சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி ராஜாங்க அமைச்சு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து சுபீட்சமான தொலைநோக்கினைக் கொண்ட யதார்த்தமான சகல பிரஜைகளுக்கும் திட்டவட்டமான ஸ்திரத்தன்மை கொண்ட நாட்டை உருவாக்கும் தூரநோக்கு சிந்தனையில் உருவாகிய செளபாக்கிய உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ” இன்று (5)வேணாவில்,நேசன் குடியிருப்பு,கைவேலி, மருதமடு ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து புதுக்குடியிருப்பு மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களால் இன்று (5) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தி நாட்டின் தொழிற் துறையில் தன்னிறைவு கண்டு உள்ளூர் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிப்பிட்டளவு உயர்த்துவதே இதன் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் பிரகாரம் ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்கு பதினைந்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் இந்த ‘செளபாக்கிய நிகழ்ச்சித் திட்டத்தின்’ மூலம உள்ளூர் உற்பத்தியில் தன்னிறைவு காணும் அதே வேளை சுயதொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அநுகூலங்களை நாம் அடைந்து கொள்வதுடன் நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாம் அடைந்து விடலாம் எனக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது

எமது பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் இவ்வாறான அபிவிருத்தி பணிகளின் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுடைய இயல்பு வாழ்க்கையை கட்டியெழுப்புவதன் மூலம் எமது மக்களின் வாழ்வை சுபீட்சமடையச் செய்யலாம் என மேலும் தெரிவித்தார்.