வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா!

coronavirus disease covid 19 infection medical with magnifying glass covid 19 typography new official name coronavirus disease named covid 19 coronavirus screening concept vector 4974 142 1
coronavirus disease covid 19 infection medical with magnifying glass covid 19 typography new official name coronavirus disease named covid 19 coronavirus screening concept vector 4974 142 1

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 12 பேர் மன்னாரிலும் 8 பேர் யாழ்ப்பாணத்திலும் கண்டறியப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 304 பேரின் மாதிரிகள் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று 457 பேரின் மாதிரிகள் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 20 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நவாலியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகார பிரிவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் நவாலியில் கடந்த வாரம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆசிரியையுடன் பேருந்தில் முல்லைத்தீவுக்கு சென்று திரும்பியவர்.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மெலிஞ்சிமுனையில் 6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்குபற்றியவர்கள்.

மன்னார் நகரில் உள்ள கொமர்ஷல் கிரெடிட் நிதி நிறுவனத்தில் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றும் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள்.

மன்னார் மாந்தை மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் நகரில் சலூன் தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.