தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 13 பேர் கைது

நாட்டில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மூவாயிரத்து 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவாயிரத்து 250 பேருக்கு எதிராக இதுவரையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் வார இறுதிநாட்களில் குழுக்களாக கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.