மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசமாக்குவதற்கான முயற்சிகளை அனுமதிக்க போவதில்லை!

Radha
Radha

மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று (06.03.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,  ‘சம்பள நிர்ணய சபை 1000 விடயத்தில் தலையிட்டதனால் இன்று வித்தியாசமாக தோட்ட துறைமார் தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. ஹோல்டன் மற்றும் கந்தப்பளை தோட்டங்களில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் தோட்ட துறைமார் வீதியில் இறங்கி போராடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது