நீர்ப்பாசன செழிப்பு கிராமிய குளங்கள் புனரமைப்பு புதுக்குடியிருப்பில் ஆரம்பித்து வைப்பு!

received 944316712771572
received 944316712771572

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் செளபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசன செழிப்பு எனும் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 58 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் குளத்தின் புனரமைப்பிற்கான அங்குராப்பண நிகழ்வு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இன்று (07) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் , புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கமநல திணைக்கள உதவி ஆணையாளர், விவசாயத் திணைக்கள அதிகாரிகள் ,நீர்ப்பாசன பொறியியலாளர்கள், கமக்கார அமைப்புக்களின பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வேலைத் திட்டத்தின் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து வேலைத் திட்டத்தை கௌரவ வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.