இராணுவ சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி

625.500.560.350.160.300.053.800.900.160.90 5
625.500.560.350.160.300.053.800.900.160.90 5

இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் காவல்துறை பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.