மேல் மாகாணத்தில் 1,156 பேர் கைது

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

மேல் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் 1,156 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 584 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும், ஏனையவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதிப் காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளதாக தங்களுக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குருவிட்ட, எஹெலியகொட, களனி மற்றும் பல்லேகல ஆகிய காவல் பிரிவுகளிலேயே நான்கு முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு வந்துள்ளது.

இதன் காரணமாக நகர்ப்புறங்களில் வாகனங்களை நிறுத்தும்போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் பிரதிப் காவல்துறை மா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.