ஸ்புட்னிக் வீ’ தடுப்பூசிக்காக ரஷ்யாவுக்கு கடிதம் அனுப்பப்பிய இலங்கை

channa jayasumana
channa jayasumana

நாட்டில் அவசர தேவை நிமித்தம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியினை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுக்கு அரசாங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கை குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ராஜாங்க அமைச்சர் சன்னஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசியினை கொள்வதற்கான நிதி காணப்படுவதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்று அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் இதுவரை 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சுமார் 5 லட்சம் பேர் நாட்டில் கொரோனா தொற்று அபாய வலயங்களில் வசிப்பவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.