டியூ. குணசேகரவும் அமைச்சர் மகிந்த அமரவீரவும் தேர்தல் ஒப்பந்தம்

download 2 7
download 2 7

முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகரவின் தகவலால் அமைச்சர் மகிந்த அமரவீர, ஆச்சரியமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

முத்துராஜவெல சுற்றுச் சூழல் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக கலந்துரையாட முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண,டியூ குணசேகரவுடன் அமைச்சர் மகிந்த அமரவீரவை சந்தித்துள்ளார்.

அப்போது தான் முதலில் தேர்தலில் போட்டியிட்ட போது ஏன் நீங்கள் மாத்திரம் எனக்கு உதவி செய்தீர்கள் என மகிந்த அமரவீர, டியூ குணசேகரவிடம் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள டியூ. குணசேகர, தான் பிறந்த ஊர் ஹம்பாந்தோட்டை எனவும் தான் முதலில் தங்காலை தொகுதியிலேயே போட்டியிட்டதாகவும் அப்போது தனக்கு உதவியவர் அமைச்சர் மகிந்த அமரவீரவின் தந்தை டிங்கி மாத்தையா எனக் கூறியுள்ளார்.

எனினும் இந்த தகவலை தான் இதுவரை வெளியிடவில்லை எனவும் மகிந்த அமரவீரவின் தந்தை தனக்கு வழங்கிய உதவி பிரதி உபகாரமாகவே தான் மகிந்த அமரவீரவுக்கு உதவியதாகவும் டியூ. குணகேகர குறிப்பிட்டுள்ளார்.