கல்முனை பிரதேச செயலக சர்வதேச மகளிர் தின நிகழ்வு

IMG 20210308 115052
IMG 20210308 115052

கல்முனை பிரதேச செயலக சர்வதேச மகளிர் தின நிகழ்வு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.பாத்திமா சிபாயாவின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று (08) இடம் பெற்றது.

110வது சர்வதேச மகளிர் தினம் இலங்கையின் சகல பிரதேசங்களிலும் கொண்டாடப்பட்டதுடன் இலங்கை மகளிர்களை வலுப்படுத்தவும், அவர்களின் உரிமைகளை உரிய முறையில் பெற்றுக் கொடுக்கவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் ஒவ்வொரு வருடமும் இவர்களுக்கென பல்வேறு விதமான செயற்றிடங்களும், ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களும், கருத்தாடல்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இவ்வமைச்சினால் மார்ச் 08ஆம் திகதி கொண்டாடப்படும் மகளிர் தினத்தை முன்னிட்டு வருடந்தோரும் பொருத்தமான வாசகம் முன்மொழியப்பட்டு அவை தேசிய ரிதீயாகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இவ்வருடத்துக்கான வாசகமாக ‘நாடும் தேசமும் உலகமும் அவளே’ என்ற வாசகம் அறிமுகப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்சான், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலீஹ், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ரி.எம்.கலீல், கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் யூ.எல். பதிறுத்தீன், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி ஜனுபா, கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகர்றப் பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாஸீன் பாவா, முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.சம்றினா கனிபா, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.ஹஸ்பியா, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ.பஜிமிலா,
உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.