மண் அகழ்விற்கு என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை உயர் மட்ட குழுவினர் பார்வையிட்ட பின்பே மண் அகழ்வுக்கு அனுமதி!

IMG 20210309 WA0059
IMG 20210309 WA0059

மன்னார் மாவட்ட பகுதிகளில் காணி தொடர்பாக இடம் பெறும் சட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் குறித்த காணி தொடர்பில் மன்னார் மாவட்ட பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இன்று (9) செவ்வாய்க்கிழமை காலை ஆராயப்பட்டது .

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில்
மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், காணி திணைக்கள உத்தியோகத்தர்கள்,
இராணுவ காவல்துறை உயர் அதிகாரிகள், அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் நீர் நிலை பாதிப்பு, கடல் நீர் உட்புகுதல், சுற்றாடல் மாசுபடுதல் போன்ற நடவடிக்கைகளின் ஊடாக மக்களினால் கிடைக்கப் பெற்ற பல்வேறு முறைப்பாடுகளை அடுத்து மண் அகழ்வு முற்றாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்திகளுக்கான மண்ணின் தேவைகள் குறித்தும் இதன் காரணமாக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மண் அகழ்வதற்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு உயர் மட்ட குழுவினர்ன் பார்வையிட்ட பின்னர் தேவைகள் குறித்து மண் அகழ்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காணி தொடர்பான பிணக்குகள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்துவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணி மற்றும் மண் அகழ்வு தொடர்பில் ஆராயப்பட்ட கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .