ஹட்டன் பிரதேசத்தில் இன்று ஆலங்கட்டி மழை!

alangatti 1 1200x630xt
alangatti 1 1200x630xt

ஹட்டன் பிரதேசத்தில் இன்று (09) மாலை ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பிரதான வீதியின், ஹற்றன் குடாகம பிரதேசத்திலேயே இவ்வாறு ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

இன்று பி.ப. 3.30 மணியளவில் பெய்த இம்மழையில் அதிகளவான பனிக்கட்டிகள் வீழ்ந்துள்ளதோடு சுமார் 5 நிமிடங்கள் வரை இது தொடர்ந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.