வடக்கு மாகாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா!

625.500.560.350.160.300.053.800.900.160.90 52 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 52 1

வடக்கு மாகாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 20 பேர் யாழ்ப்பாண மாவட்டத்திலும் ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்திலும் 6 பேர் வவுனியா மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 368 பேரின் மாதிரிகள் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 20 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்களில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர்களில் 3 பேர் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் நேற்றுமுன்தினம் சுன்னாகத்தில் கண்டறியப்பட்ட இலங்கை வங்கி ஊழியர் ஒருவருடன் நேரடித் தொடர்புடையவர்கள்.

மேலும் இருவர் இ.போ.ச யின் யாழ்ப்பாணம் – கோண்டாவில் சாலையில் கண்டறியப்பட்டுள்ளனர். அங்கு 30 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் ஒருவர் சாரதி பயிற்றுவிப்பாளர். மற்றையவர் சாலை அலுவலகத்தில் பணியாற்றுபவர். மற்றையவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பணியாற்றுபவர். யாழ்ப்பாண நகரில் கே.கே.எஸ் வீதியில் கருவாட்டுக் கடை நடத்தும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் மேலும் 5 கைதிகளுக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இ.போ.ச யின் காரைநகர் சாலையில் மேலும் 2 நடத்துனர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர எல்லையில் உள்ள இராணுவ முகாம் சிப்பாய் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை மெலிஞ்சினைமுனையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் 4 பேருக்கு தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் வெளிநாடு செல்வதற்காக பி சி ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்கள். ஒருவர் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட போது மாதிரிகள் பெறப்பட்டவர்.

செட்டிக்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது . என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.