‘திரிய பியச’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கல்முனையில் வீடுகள் கையளிப்பு

vlcsnap 2021 03 11 06h24m00s543
vlcsnap 2021 03 11 06h24m00s543

நாட்டுக்காக ஒன்றினைவோம்’ எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சமுர்த்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘திரிய பியச’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவின் மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று (03) வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது.

மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை சமூர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.எம்.முபீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூர்த்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பதில் பணிப்பாளரும் மேலதிக மாவட்ட செயலாளருமான வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடு வீடாக சென்று இரவு 8.00 மணியையும் தாண்டிய நிலையில் இந்த வீடுகளை திறந்து பயனாளிகளிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி, சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா உட்பட திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

‘திரிய பியச’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் பிரதேச செயலத்தின் சமூர்த்தி திணைக்களத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவ்வாறு வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.