கடத்தப்பட்ட சுவிஸ் அதிகாரி-3வது நாள் விசாரணை

swiss
swiss

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் அதிகாரி 3வது நாளாக இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக அங்கு பிரசன்னமாகியுள்ளார்.

நேற்று முன்தினம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்ததுடன், நேற்று இரண்டாவது நாளாகவும் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை தூதரக பெண் அதிகாரிக்கு எதிர்வரும் 12ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.