இராஜாங்க அமைச்சினை நிராகிரித்தமைக்கான காரணம் இதுதான்

musthapa
musthapa

அமைச்சரவையின் அமைச்சராக இருந்தமையின் காரணமாகவே இராஜாங்க அமைச்சர் பதவியை நிராகரித்ததாக பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையினை 15 ஆக குறைத்தமை தொடர்பில் ஜனாதிபதியின் செயற்பாட்டினை வரவேற்றிருந்ததுடன் ஜனாதிபதியின் எண்ணங்களுக்கேற்ப அடுத்தவர்களுக்கும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கப்பட வேண்டும் என்ற நன் நோக்கத்திலேயே இவ்வாறான முடிவொன்றை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சுக்களை வகிக்காதவர்களுக்கு அமைச்சுப்பொறுப்பு வழங்கியதை தாம் வரவேற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.