பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்

ajith rohana
ajith rohana

எதிர்வரும் வார இறுதி காலப்பகுதியில் பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில்  பொது மக்கள் வெளியிடங்களில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாகவும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன்,தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 09 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 3346 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.