இஸ்லாமிய வஹாப் வாதத்தை பரப்பிய ஒருவர் கைது

kaithu 1

இலங்கையில் வஹாப் மற்றும் ஜிஹாத் கொள்கைகளை பரப்பிய குற்றச்சாட்டில், ஜமாத்தே இஸ்லாமி (Jamaat-e-Islami) அமைப்பின் முன்னாள் தலைவர் ரஷீட் ஹஜ்ஜுல் அக்பர் (Rasheed Hajjul Akbar) பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடை பகுதியில் நேற்று கைதுசெய்யப்பட்ட அவர், மாவனெல்லை முருத்தவளை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவராவார்.

அவர், மாவனெல்லையில் புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபரின் நெருங்கிய உறவினர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.