வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிட தீர்மானம்

திரும்பினர் 2
திரும்பினர் 2

வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டிற்கு வரும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விசேடமாக கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டு இந்நாட்டிற்கு வரும் இலங்கையர்களை அவர்களது வீட்டில் சுய தனிமைப்படுத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் மற்றும் நாட்டிற்கு வரும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமை தொடர்பில் இந்த புதிய சுகாதார வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாட்டிலிருந்து குறுகிய காலத்திற்காக வெளிநாடு சென்று மீண்டும் நாட்டுக்கு வரும் நபர்கள் கடைபிடிக்கவேண்டிய வழி வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப் பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விசேட அரச பயணங்கள், உத்தியோகபூர்வ பயணங்கள் மற்றும் வர்த்தகரீதியான பயணங்களின் பின்னர் நாட்டிற்கு வரும் நபர்கள் கடைபிடிக்க வேண்டிய முறையை அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.