ஆற்றிலிருந்து சடலம் மீட்பு

20210317 083503
20210317 083503

ஓட்டமாவடி பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (17.03.2021) காலை மீட்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில் மிதந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தோணி ஒன்றில் தனிமையாக சென்ற நபரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மரணமடைந்த நபர் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சேகு இஸ்மாயில் சப்ராஸ் (மீனி) என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.