50 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு

download 30
download 30

போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் மற்றும் ஒழுங்கமைப்பட்ட குற்றக்கும்பலினால் மேற்கொள்ளப்படும் நகைக் கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எஹெலியகொட பிரதேசத்தில் நேற்று, நகையகம் ஒன்றில் இவ்வாறான திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நகையகத்துக்கு வந்த நபரொருவர் அங்கிருந்த ஊழியரிடம் தான் நகை வாங்குவதற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்போது, நகையக ஊழியர் மூன்று தங்கச் சங்கிலிகளை அவருக்கு காண்பித்துள்ளார்.

சந்தேகநபர் குறித்த தங்க நகைகளை பார்வையிடும் போர்வையில் அவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று தங்க சங்கிலிகளின் பெறுமதி 25 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை கொள்ளையிட்டுச் செல்லுதல் மற்றும் மேற்குறிப்பிட்டது போன்ற திருட்டுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நகைகளை அணிந்து வீதிகளில் செல்லும்போது மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன கோரியுள்ளார்.