அடையாள வேலை நிறுத்தத்திற்கு மத்தியில் சேவையில் ஈடுபடும் தொடருந்துகள்

thumb large train
thumb large train

தொடருந்து சாரதிகள் மற்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்களின் அடையாள வேலை நிறுத்தத்திற்கு மத்தியில் 15 அலுவலக தொடருந்துகள் கோட்டை தொடருந்து நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

பிரதான மார்க்கம், களனிவெளி மார்க்கம் மற்றும் கரையோர மார்க்கம் ஆகியவற்றிற்கூடாக இவ்வலுவலக தொடருந்துகள் கோட்டை தொடருந்து நிலையம் நோக்கி வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாதாரண ஒழுக்காற்று நடவடிக்கைகளை இரத்து செய்வது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இவ்வடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.