பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாளை யாழ் விஜயம்

kamal gunaratne
kamal gunaratne

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நாளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

பாதுகாப்புச் செயலராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.