அரைச் சொகுசு பஸ் சேவை தடை

Gemunu Wijeratne
Gemunu Wijeratne

பொதுப் போக்குவரத்தில் பயணிகளுக்கு எந்தவித வசதிகளையும் அளிக்காத அரைச் சொகுசு பஸ் சேவையைத் தடை செய்ய காலம் தாழ்த்தாமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன போக்குவரத்து அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யன்னலுக்கு புடைவைத் திரையைத் தவிர வேறு எந்த வசதிகளையும் வழங்காமல், பயணிகளிடம் சுரண்டி உழைக்கின்ற இந்த அரைச் சொகுசு பஸ்களை உடன் இல்லாமல் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் முன்வைத்திருந்த கருத்துக் குறித்து அவரிடம் வினவியதற்கே கெமுனு விஜேரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்