புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா

IMG20210321142126
IMG20210321142126

வரலாற்று சிறப்புமிக்க கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

நேற்று விளக்கு வைத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு பங்குனி உத்தரப் பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

இவ்வாலயத்தின் தொன்றுதொட்டு பாரம்பரிய முறைப்படி இன்றைய தினம் காலை 7 மணிக்கு விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைக்கப்பட்டு பண்டைய மரபுகளுக்கு அமைவாக மீசாலை புத்தூர் சந்தியில் இருந்து பண்டம் எடுத்து வருவதற்காக மாட்டு வண்டிகளில் அடியார்கள் ஆலயத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

இன்று புறப்பட்ட இவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி இரவு ஆலயத்தை வந்தடைந்தவுடன் பொங்கல் விழா நடைபெறும் இவ்வாண்டு கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அடியார்கள் அனுமதிக்கப்படுவதுடன் நேர்த்திகளை நிறைவேற்றுவார்கள் விரைவாக ஆலயத்தில் இருந்து வெளியேறி நேர்த்திக்கடன்களை செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் வைத்தல் தினமான இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை காவடி பாற் செம்பு மற்றும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் காலத்தில் ஆலயச் சூழலில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற பொது பேருந்து சேவைகளுக்கோ எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை .