செயிண்ட் மற்றும் கிட்ஸ் நெவிஸுடன் ஒப்பந்தம் செய்த இலங்கை

screenshot 20210323 092414 samsung internet7904984286844802130.
screenshot 20210323 092414 samsung internet7904984286844802130.

கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்திர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயிண்ட். கிட்ஸ் நெவிஸிக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான இயன் மெக்டொனால்ட் லிபர்ட் ஆகியோர் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டதன் மூலம் இராஜதந்திர உறவுகளை நிறுவுவது முறையாக மேற்கொள்ளப்பட்டது.

செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் முன்னாள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு காலனி மேற்கிந்திய தீவுகளின் ஒரு பகுதியாகும்.

இந்த மாதத்திற்குள் இலங்கை முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய இரண்டாவது நாடு இதுவாகும்.

இலங்கை முன்னதாக ஆஸ்திரியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் அமைந்துள்ள ஐரோப்பாவில் ஒரு பிரதானமான லிச்சென்ஸ்டைனுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.