மட்டக்களப்பில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம்

01 1 1
01 1 1

வன ஜீவராசிகள் மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலில் சர்வதேச வனாந்தர வாரத்தை முன்னிட்டு “வன மறுசீரமைப்பு மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான பாதை” எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் வனபரிபாலன திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை வட்டார வனபரிபாலன காரியாலயத்தின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலை கிராமத்தில் இன்று இடம்பெற்றது.

மரநடுகை வேலைத் திட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அமீர், வனவிரிவாக்கல் உத்தியோகத்தர் எஸ்.எம்.சபீக், பகுதிவன உத்தியோகத்தர் ஏ.எச்.கியாஸ் உள்ளிட்ட வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அதிதிகள் மரநடுகை வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்துடன், மரநடுகை வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் இரண்டாயிரம் மரக்கன்றுகள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில்; நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிரிவாக்கல் உத்தியோகத்தர் எஸ்.எம்.சபீக் தெரிவித்தார்.