கல்முனை பிரதேச யுவதிகளுக்கு கைவினை அலங்கார பொருட்கள் செய்யும் பயிற்சி பட்டறை.

IMG 20210324 103007
IMG 20210324 103007

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிரதேச யுவதிகளுக்கு கைவினைஅலங்கார பொருட்கள் செய்யும் பயிற்சி பட்டறை நிகழ்வு இன்று (24) பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.பெளசுல் ஹிபானாவின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியின் தலைமையில் நடைபெற்றது.

கலாசார திணைக்களத்தின் வேலைத்திட்டங்களில் ஒன்றான”தொலஸ் மகே பகன” வேலைத் திட்டத்தின் கீழ்யுவதிகளின் உற்பத்தி திறன், கலை மற்றும் ஆக்கத்திறனை மேம்படுத்தும் நோக்கில் யுவதிகளுக்கு கைவினை அலங்கார இப்பயிற்சியின் பிரதான வளவாளர்களாக ஸீனத் தூபா மற்றும் கெளசர் ஜஹான்வழங்கி வைத்தார்கள்.

பிரதேச யுவதிகளை அலங்கார கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்து அதனை  சந்தைப்படுத்தும்நோக்கோடு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.சாலி, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி ஜனுபா நெளபல், திட்டமிடல் பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.எம்.ஹஸன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகர்அப், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.பாத்திமா சிபாயா, மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் இம்திஸா ஹஸன் மற்றும் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.