இதுவரையான காலப்பகுதிக்குள் 83 காட்டு யானைகள் உயிரிழப்பு

REWATHA ELEPHANT
REWATHA ELEPHANT

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், 83 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்சார தாக்கம், துப்பாக்கிச்சூடு, தொடருந்து விபத்துகள் மற்றும் இயற்கைக் காரணிகள் என்பனவற்றினால், யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேநேரம், காரணத்தைக் கண்டறியமுடியாத மரணங்களும் பதிவாகியுள்ளன.

மனித நடவடிக்கைகளினால், யானைகள் பாதிக்கப்படுகின்ற நிலையில், யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார்.