அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கை வருவதில் தாமதம் ஏற்படாது – சன்ன ஜயசுமன

8813160f 39b7 49ec 8622 b91f66114a7e
8813160f 39b7 49ec 8622 b91f66114a7e

இலங்கையினால் முன்பதிவு செய்யப்பட்டுள்ள 10 இலட்சம் தடுப்பூசிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்தியா, தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை இதனைப் பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளின், அனைத்து ஏற்றுமதிகளையும் இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிகரித்துவரும் நோயாளர்களின் எண்ணிக்கை, எதிர்காலத்தில் உள்நாட்டு தேவையை அதிகரிக்கக்கூடும் என்ற காரணத்தினால், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.