ஆயிரம் ரூபா சம்பள விவகாரம்; வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான பரிசீலனை இன்று!

download 2 22
download 2 22

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளார்ந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானியை வலு இழக்கச் செய்யும் வகையில் எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்கக் கோரி 20 பெருந்தோட்ட கம்பனிகள் இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ர கீர்த்தி, தேயிலை தொழிற் துறை சம்பள நிர்ணய சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.