பல பாகங்களில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு!

8a8911b8 8c2a1f30 7908b225 f803a63a 6560dab1 rain 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
8a8911b8 8c2a1f30 7908b225 f803a63a 6560dab1 rain 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.