ஏப்ரல் முதலாம் திகதி முதல் நிர்ணய விலையில் அரிசியை பெறலாம்!

b631dbd2 a0328976 b56ee3af mahindananda aluthgamage 850x460 acf cropped 850x460 acf cropped 1
b631dbd2 a0328976 b56ee3af mahindananda aluthgamage 850x460 acf cropped 850x460 acf cropped 1

ஏப்ரல் முதலாம் திகதி முதல்  சதொச, மொத்த விற்பனை கூட்டுறவு  நிலையங்கள், பிரதான நிலை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாக  சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி ஒரு கிலோவை 95 ரூபாவிற்கும்  ,நாட்டரிசி ஒரு கிலோவை 97 ரூபாவிற்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

போதுமான அளவிற்கு அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

சதொச  தலைவர், மொத்த கூட்டுறவு விற்பனை நிறுவன ஆணையாளர், பிரதான நிலை விற்பன நிலையங்களின் பிரதானிகள் ஆகியோருடன் நேற்று முன்தினம்  விவசாயத்துறை அமைச்சில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியின் நிர்ணய விலையினை பேணுவது சலால்மிக்கதாக உள்ளது. அரிசியின் விற்பனை விலை தொடர்பில் அரசாங்கம்  வர்த்தமானி வெளியிட்டாலும் அவற்றை முறையாக பின்பற்ற முடியாத தன்மை காணப்படுகிறது. 

கடந்த காலங்களில்  அரிசி உற்பத்தியாளர்கள் முறையற்ற வகையில் செயற்பட்டதன் காரணமாக  அரிசி விற்பனை விலையில் மாறுப்பட்ட தன்மை ஏற்பட்டது. 

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு கூடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். 

இதன் முதற்கட்டமாக அரிசி விலையின் நிர்ணய தன்மையினை உறுதியாக பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய   ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி ஒரு கிலோ 95 ரூபாவிற்கும், நாட்டரிசி ஒரு கிலோ 97 ரூபாவிற்கும் சதொச, மொத்த கூட்டுறவு விற்பனை நிலையங்கள், கார்கில் புட் சிட்டி உட்பட பிரதான நிலைய விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நாடு தழுவிய ரீதியில் உள்ள 2500  மொத்த விற்பனை கூட்டுறவு நிலையங்கள்,447 சதொச  விற்பனை நிலையங்கள், மற்றும் பிரதான நிலை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றுக்கு 3 மாத காலத்துக்கு தேவையான அரிசி நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக விநியோகிக்கப்படும்.

நாட்டில் அரசி விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் கிடையாது. 6 மாத காலத்துக்கு தேவையான அரிசி போதுமான அளவிற்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரு இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு காணப்படுகிறது. இதில் 28 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் செய்கை முன்னெடுக்கப்படுகிறது. இவ்வெண்ணிக்கையை அதிகரிக்க நாடு தழுவிய ரீதியில் நடவடிக்கை விவசாய திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. என்றார்.