பசறையில் இடம்பெற்ற கோர விபத்து;பிள்ளைகளை எவருக்கும் வழங்கமாட்டோம்! உறவினர்கள் விடாப்பிடி

625.300.560.350.160.300.053.800.450.160.90 2
625.300.560.350.160.300.053.800.450.160.90 2

அண்மையில் பசறையில் இடம்பெற்ற கோர விபத்தில் பெற்றோர்களை இழந்த மூன்று பிள்ளைகளையும் பொறுப்பேற்க முன்வந்த மருத்துவரின் ஆசையை குழந்தைகளின் உறவினர்கள் நிராகரித்துள்ளனர்.

பெற்றோரை இழந்த குறித்த குழந்தைகளை ஏற்க தான் தயாராக இருப்பதாக, அம்பாறை அரசாங்க வைத்தியசாலை வைத்திய நிபுணர் வஜிர ராஜபக்ச தெரிவித்திருந்தமை பலராலும் வரவேற்கப்பட்டிருந்தது.

அத்துடன் மூன்று பிள்ளைகளையும் அவர்களின் பாதுகாவலர்கள் என்னிடம் ஒப்படைக்க விருப்பம் தெரிவிப்பார்களேயானால், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என கூறியிருந்தார்.

இம் மூன்று பிள்ளைகளையும் இணைத்துக்கொண்டு, எனது குடும்பத்தை பெரிதாக்கவே விரும்புகின்றேன் என்றும், இப் பிள்ளைகள் மூவரது வருகையை எனது குடும்பத்தினர் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்திருந்தார்.

இப் பிள்ளைகளை விரைவில் சந்திக்கவுள்ளேன் மனிதாபிமான முறையிலேயே நான் செயற்படுகின்றேன். இன, மதம், ஜாதி எதனையும் நான் பார்க்கவில்லை. இப் பிள்ளைகளை பிரிக்க நினைக்கவில்லை. மூன்று பேரையும் ஒன்றாக வளர்க்கவே விரும்புகின்றேன். அப்பிள்ளைகள் தனது பாட்டியை விட்டு வர விரும்பாத பட்சத்தில், அவர்கள் பெரியவர்களாகும் வரை, அவர்களுக்கான உதவிகளை வழங்க எதிர்ப்பார்க்கின்றேன்’ என்றும் மருத்துவர் கூறினார்.அத்துடன் பிள்ளைகளின் பெற்றோரின் கனவினை நனவாக்கும் வகையில், பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து, அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வளம்பெற வைப்பதே தமது இலட்சியமென்றும் அவர்கள் கூறுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.