வவுனியாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விஷேட கருத்தமர்வு!

c0c3964cd597231e9fac5f17a7394bf4 XL
c0c3964cd597231e9fac5f17a7394bf4 XL

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியாவில் எதிர்வரும் ( 29.03) திங்கட்கிழமை காலை 9 மணிக்கு உள்வட்ட வீதியில் அமைந்துள்ள பலநோக்கு மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை மன்னிட்டு விஷேட கருத்தமர்வு இடம்பெறவுள்ளது .


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ராலின் டிமெல் கலந்து கொள்வதுடன் இவ்விஷேட கருத்தமர்வில் வளவாளர்களாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி விநோதன் , திருமதி நாளாயினி இன்பராஜ் பணிப்பாளர் வடமாகாண கிராம அபிவிருத்தித்திணைக்களம் திருமதி சகிலா பாணு உதவி விவசாயப்பணிப்பாளர் மன்னார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளதாகவும் இந்நிகழ்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு இந்த நிகழ்வுகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா மாவட்டத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது .