காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட கைப்பேசிகள் அடங்கிய இரு பொதிகள்!

89238244
89238244

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகள் உட்பட சட்டவிரோதமான பொருட்கள் அடங்கிய இரு பொதிகள் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்கு அருகில் உள்ள குறுகிய பாதையில் நேற்று(28) இரவு இந்த இரு பொதிகளும் வீசப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த இரு பொதிகளிலும் 4 கையடக்க தொலைபேசிகள், 3 தொலைபேசி மின்னேற்றிகள் மற்றும் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய 4 பக்கட்டுகள் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.