ஜனாதிபதியின் கீழ் கொழும்பு துறைமுக நகரின் நிர்வாகம்

download 1 35
download 1 35

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் வரி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமை எவ்வித பாதகமாக நிலைமையையும் ஏற்படுத்தாது.

காரணம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவின் ஊடாகவே இவை நிர்வகிக்கப்படுகின்றன என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொழும்பு துறைமுக நகரம் இலங்கையில் உருவாகிய மிக முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டமாகும்.

இதன் மூலம் இலங்கையை ஆசியாவின் வர்த்தக மையமாக உருவாக்க எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இலங்கை அந்த வாய்ப்பை இழந்துள்ளதோடு சிங்கப்பூர் மற்றும் டுபாய் என்பன மாற்று வர்த்தக மையங்களாக உருவாகின.

எனினும் உலக வங்கி அதன் தலைமை அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்காகன இடமாக இலங்கை உபயோகிக்கும் வகையில் அதற்கான அடிப்படைவசதிகளை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இலங்கையை சகல துறைகளினதும் மையமாக உருவாக்க வேண்டும் என்பது 2010 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது.

அதற்கான முன்னெடுப்பாகவே கொழும்பு துறைமுக நகரத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

2008 ஆம் ஆண்டு வியாபார சட்டத்தின் கீழ் இவ்வாறு வரி சலுகை வழங்குவதற்கு சட்டரீதியாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கேள்வி : இவ்வாறான நிலையில் ஹொங்கொங் மற்றும் மொறோக்கோ ஆகிய நாடுகளில் வர்த்தக ஸ்தலமாக இலங்கை மாற்றமடையக் கூடுமா?

பதில் : ஒருபோதும் அவ்வாறு இடம்பெறாது. கடந்த அரசாங்கத்திற்கு இதற்கான தேவை காணப்பட்டது. எமக்கு அவ்வாறானதொரு இலக்கு கிடையாது. எமது நாட்டு கலாசாரத்தை சீரழித்து வருமானமீட்டும் தேவை தற்போதைய அரசாங்கத்திற்கு கிடையாது.

கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்வாகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவின் ஊடாகவே நிர்வகிக்கப்படுகிறது.

இதன் சகல உறுப்பினர்களும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர்களாவர். துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுவினாலேயே நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இலங்கைக்கு இதன் மூலம் பல நன்மைகளே கிடைக்கின்றன என்றார்.